இந நடனம் ராமநவமி நாளன்று துவங்கி ஒன்பது நாட்கள் இரவில் எட்டு மணி துவங்கி பன்னிரண்டு மணி வரை நடைபெறும். பத்தாம் நாள் ' வசந்த் ' எனப்படும் நாளாகும். இந்நாளில் ஊரை சுற்றி கொணங்கி நடன கலைஞர்கள், பாகவதர்கள், சிறுவர், இளைஞர்கள் நல்லெண்ணெய், சீயகாய் பல வீடுகளில் பஜனை பாடிக் கொண்டே வாங்கி பின் நடனம் நடைபெற்ற கோவில் அல்லது மடம் திரும்பி புனித நீராடி, மீண்டும் பதிநூராம் நாள் வரை விடிய விடிய பஜனை பாடி, ஹனுமான் பூஜை, கோட்டை கட்டுதல் என்ற சம்ப்ரதாயம் முடித்து நிறைவு செய்வர்.
இந நடனம் பிறந்தது கிருஷ்ணன் லீலையில். வக்கிரதந்தன் என்ற அசுரன் கிருஷ்ணனை கொல்ல கம்சனால் அனுப்பப்பட்டான். அவனை தடுக்க கிருஷ்ணர் சக்ர ஆயுதத்தை ஏவினார். அவன் சக்ராயுதத்தை தன் பல்லினால் கடித்துக் கொண்டான். வாய் த்ரந்தால் அவன் வாயை சகரம் கிழித்து இறப்பான். எனவே அவன் வாயே திறக்கவே இல்லை. எனவே கிருஷ்ணர் அவனின் வாயை திறக்க ஒரு தந்திரம் செய்தார். பலராக உருமாறி நடனம் ஆடினார். அந்த நடனத்தின் அபிநயங்கள் மிக சிரிப்பு மூட்டுபவை ஆக இருக்கும். இந்த சிரிப்பு அபிநயங்கள் நிறைந்த கொணங்கி நடனம் முதன் முதலில் கிருஷ்ணர் ஆடினார். அசுரன் அந்த நடனத்தை பார்த்து சிரிக்க அவன் வாயை சகரம் கிழித்து. மடிந்தான்.
இந்த நடனத்தை, ராம சரிதத்தை விளக்கும் பாடல்கள் மற்றும் நடனங்களை பரம்பரையாக சேலம் பகுதில் உள்ள சௌராஷ்ட்ர பெருமக்கள் ஆடிவருகின்றனர் .
அவர்களில் மிகவும் நன்கு சிரிப்பு ஊட்டக் கூடிய நடனக் கலைஞர் ஹீரோ ஆகிவிடுவார். என் இள வயதில் ' தயிர் கடை ' என்று ஒருவரை பட்டப் பெயர் வைத்து அழைப்போம். என் எனில் தயிர் கடையும் பாட்டிற்கு அவரின் சிரிப்பு ஊட்டும் அபிநயங்கள் இந்தப் பெயர் பெற்றுத் தந்தனர். எங்களின் இள வயது கொணங்கி நடனத்தின் ஹீரோ அவர்.
வால்மீகி திருடனாய் இருந்து திருடுவது !
முன்னாள் தமிழக அமைச்சர் கா. ராசாராம் அவர்கள் கொணங்கி கலைஞர்களை பாராட்டுகிறார். குகன் ராமனை கங்கைக் கரையின் அக்கறைக்கு அழைத்து செல்லும் பாட்டிற்கு நடனம்
அரக்கர் வதம் செய்கிறார் ஸ்ரீ ராம சந்திர சுவாமி
சேலத்தின் முன்று மடங்களிலும், கிருஷ்ணன் கோவிலிலும், சௌராஷ்ட்ர பள்ளியிலும், செவ்வாய் பேட்டை பாண்டுரங்க கோவிலிலும் நடந்து வந்த இந்த கொணங்கி நடனம் தற்போது கலைஞர்கள் குறைந்த எண்ணிக்கை உள்ளதால் ஒரு மடத்தில் மட்டும் ஒரே நாளில் நடைபெற்று முடிந்து விடுகிறது.
இந்த அளவாவது நமது பாரம்பரிய கலை காப்பற்றப் பட்டு வருகிறதே என்று சமாதனம் கொள்ள வேண்டியது தான்.
No comments:
Post a Comment