Showing posts with label கோணங்கி. Show all posts
Showing posts with label கோணங்கி. Show all posts

Monday, April 25, 2011

Rama Navami 2011 - Sourashtra folk dance Konangi


சேலத்தில் ராம நவமி 2011 ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. வழக்கம் போல் வருடந்தோறும் நடக்கும் கலை நிகழ்ச்சியான சௌராஷ்டிரா மக்களின் நடனமான கோணங்கி, தாண்டி நடன, கெப்பி, விட்டிங்கி ஆகிய நடனம் மூலம் ராமாயண சம்பவங்கள் நடத்திக் காண்பிக்கப் பட்டது. ஏப்ரல் 12ம் தேதி செவ்வாய்பேட்டை பாண்டுரங்க தேவஸ்தானத்திலும், 16ம் தேதி சேலம் பென்னாடம் வெங்கட்ராமன் சந்து, வடகலை சம்பிரதாய மடத்திலும், 20 தேதி சௌராஷ்டிர கிருஷ்ணன் கோவில் பின் புறம் உள்ள சௌராஷ்டிர கவி, அழகரார்யா வசித்த மடத்திலும் கோணங்கி நடனம், தாண்டி நடனம், கெப்பி நடனம், விட்டிங்கி நடனம் மூலம் ராமாயண சம்பவங்கள் காமெடி கலந்து நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சௌராஷ்டிர குல பாகவதர்கள் ஜாதா. கிருஷ்ணைய பாகவதர், தெஸ்வான். துளசிராம் பாகவதர்,தெஸ்வான். பாஸ்கர் பாகவதர், குர்மிதி. மாதவன் பாகவதர், மற்றும் கோணங்கி கலைஞர்கள் கெந்தபடி. பன்னீர் செல்வம், பாசிகிடே. சர்வேஸ்வரன், பொங்கல்னு. ராமு, பெல்லே. ஜெய் சங்கர், குப்பான். கண்ணன், பாசிகிடே. சீதாராம், விஞ்சு. சிவமணி, கெந்தபடி. மணிகண்டன், கெந்தபடி. சாந்தாராம், பாரகிரி. கோபால், பிட்டா. வினோத், முராரி. கிஷோர், விஞ்சு. சுதர்சன், பாரகிரி. வாசுதேவன் ஆகியோரும், கெப்பி நடன கலைஞிகள் முராரி. சாந்தி, முராரி. உமாராணி, ஹண்டின். ஜமுனாராணி , தவ்ளான். பிரியா, தவ்ளான். ரேவதி, பசிகிடே. அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டு நடன நிகழ்சிகளை நிகழ்த்தினர்.

சிறப்பு அழைப்பார்களாக மளுவாதுன். ஹேமநாதன், பிட்டா. சாந்தாராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொது மக்கள் பலர் இரவு நேரம் என்று பாராது நிகழ்ச்சியை காத்திருந்து கண்டு களித்தனர்.

More photos of Sourashtra Folk Dance 'KoNangi' Click link below :

More photos of Sourashtra Folk Dance 'Gebbi &Vittingi' Click link below :

More photos of Sourashtra Folk Dance 'Dandi Natana' Click link below :

Monday, March 8, 2010

Konangi - Humorously bended body

கொணங்கி3 - ராம நவமி நாளில் ஆடப்படும் சௌராஷ்ட்ர நாட்டுப்புற நடனம்.
இந நடனம் ராமநவமி நாளன்று துவங்கி ஒன்பது நாட்கள் இரவில் எட்டு மணி துவங்கி பன்னிரண்டு மணி வரை நடைபெறும்.  பத்தாம் நாள் ' வசந்த் ' எனப்படும் நாளாகும்.  இந்நாளில் ஊரை  சுற்றி கொணங்கி நடன கலைஞர்கள், பாகவதர்கள், சிறுவர், இளைஞர்கள் நல்லெண்ணெய், சீயகாய் பல வீடுகளில் பஜனை பாடிக் கொண்டே வாங்கி பின் நடனம் நடைபெற்ற கோவில் அல்லது மடம் திரும்பி புனித நீராடி, மீண்டும் பதிநூராம் நாள் வரை விடிய விடிய பஜனை பாடி, ஹனுமான் பூஜை, கோட்டை கட்டுதல் என்ற சம்ப்ரதாயம் முடித்து நிறைவு செய்வர்.

இந நடனம் பிறந்தது கிருஷ்ணன் லீலையில். வக்கிரதந்தன் என்ற அசுரன் கிருஷ்ணனை கொல்ல கம்சனால் அனுப்பப்பட்டான்.  அவனை தடுக்க கிருஷ்ணர் சக்ர ஆயுதத்தை ஏவினார். அவன் சக்ராயுதத்தை தன் பல்லினால் கடித்துக்  கொண்டான்.   வாய் த்ரந்தால் அவன் வாயை சகரம் கிழித்து இறப்பான்.  எனவே அவன் வாயே திறக்கவே இல்லை.  எனவே கிருஷ்ணர் அவனின் வாயை திறக்க ஒரு தந்திரம் செய்தார்.  பலராக உருமாறி நடனம் ஆடினார்.  அந்த நடனத்தின் அபிநயங்கள் மிக சிரிப்பு மூட்டுபவை ஆக இருக்கும்.   இந்த சிரிப்பு அபிநயங்கள் நிறைந்த கொணங்கி நடனம் முதன் முதலில் கிருஷ்ணர் ஆடினார்.  அசுரன் அந்த நடனத்தை பார்த்து சிரிக்க அவன் வாயை சகரம் கிழித்து.  மடிந்தான். 

இந்த நடனத்தை, ராம சரிதத்தை விளக்கும் பாடல்கள் மற்றும் நடனங்களை பரம்பரையாக சேலம் பகுதில் உள்ள சௌராஷ்ட்ர பெருமக்கள் ஆடிவருகின்றனர் .

அவர்களில் மிகவும் நன்கு சிரிப்பு ஊட்டக் கூடிய நடனக் கலைஞர் ஹீரோ ஆகிவிடுவார்.  என் இள வயதில் ' தயிர் கடை ' என்று ஒருவரை பட்டப் பெயர் வைத்து அழைப்போம்.  என் எனில் தயிர் கடையும் பாட்டிற்கு அவரின் சிரிப்பு ஊட்டும் அபிநயங்கள் இந்தப் பெயர் பெற்றுத் தந்தனர்.  எங்களின் இள வயது கொணங்கி நடனத்தின் ஹீரோ அவர். 
வால்மீகி திருடனாய் இருந்து திருடுவது !
முன்னாள் தமிழக அமைச்சர் கா. ராசாராம் அவர்கள் கொணங்கி கலைஞர்களை பாராட்டுகிறார்.
குகன் ராமனை கங்கைக் கரையின் அக்கறைக்கு அழைத்து செல்லும் பாட்டிற்கு நடனம்
அரக்கர் வதம் செய்கிறார் ஸ்ரீ ராம சந்திர சுவாமி

வில்லை முறித்த ராமரின் திருணமப் பேச்சு வார்த்தை. !

சேலத்தின் முன்று மடங்களிலும், கிருஷ்ணன் கோவிலிலும், சௌராஷ்ட்ர பள்ளியிலும், செவ்வாய் பேட்டை பாண்டுரங்க கோவிலிலும் நடந்து வந்த இந்த கொணங்கி நடனம் தற்போது கலைஞர்கள் குறைந்த எண்ணிக்கை உள்ளதால் ஒரு மடத்தில் மட்டும் ஒரே நாளில் நடைபெற்று முடிந்து விடுகிறது.

இந்த அளவாவது நமது பாரம்பரிய கலை காப்பற்றப் பட்டு வருகிறதே என்று சமாதனம்  கொள்ள வேண்டியது தான்.